வல்லபாய் பட்டேலின் சிலைதான் உலக்திலேயே உயரமான சிலையாக (182மீட்டர் )உள்ளது. இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை( நிச்சயமாக வெளிநாட்டினரின் கண் இல்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது)இப்போது பட்டேலின் சிலையை விட உயரமான சிலையை கட்டுவோம் என பலமாநில அரசுகள் போட்டா போட்டி போட்டு கோதாவில் இறங்கியுள்ளனர்.
இந்தப்போட்டியில் இறங்கியுள்ளது நம் இந்திய ஒட்டுறவான மாநில அரசுகள் தான். குறிப்பாக அயோத்தியில் 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கவேண்டும் என உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கூரியிருந்தார்.
இந்நிலையில் மாஹாராஸ்டிர அரசும் வீரவாஜிக்கு மிகப் பெரியதாக சிலை அமைக்க வேண்டுமென்று கூறி வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசும் காவிரி தாய்க்கு 125 உயரத்தில் சிலை அமைப்பதாக அறிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசுகள் மக்களின் நன்மைக்கும், மாநில வளர்ச்சிக்கும் திட்டம் தீட்டினால்தான் அது மிகப் பயனுடைதாக இருக்கும். மாறாக போட்டி போட்டுக் கொண்டு சிலைகள் கட்டி எழுப்புவதால் பெருமையை தவிர வேறு என்ன நன்மை விளையப்போகிறது..? என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்குப் போட்டியாக சிலையை கட்ட வேண்டும் என யாரும் குரலை உயர்த்தவில்லை : அப்படி எதுவும் எழாதவரை மாநிலத்தின் அமைதிக்கு நல்லது.