Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் பின் நம்பர் தேவையில்லை.. UPI பயனர்களுக்கு புதிய அப்டேட்..!

Advertiesment
UPI

Siva

, புதன், 8 அக்டோபர் 2025 (08:08 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் UPI பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், UPI நிர்வாகமும் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அளித்து வருகிறது. அந்த வகையில், இன்று முதல் அதாவது அக்டோபர் 8 முதல், UPI பயனர்கள் இனி பின் நம்பர் பயன்படுத்த தேவையில்லை என்ற புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
 
GPay, PhonePe உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் பணம் அனுப்ப இனி பின் நம்பர் தேவை இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆதார் அட்டையில் உள்ள முகம் மற்றும் கைரேகையை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த புதிய வசதி, பின் நம்பரை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது மட்டுமல்லாமல், யாராவது திருட்டுத்தனமாக நம்முடைய பின் நம்பரை தெரிந்து கொண்டு முறைகேடு செய்யவும் வாய்ப்பு இல்லை என்ற கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது. 
 
ஆதார் அட்டையில் உள்ள கைரேகை மற்றும் முகத்தை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதி கூடுதல் பாதுகாப்பை தரும் என்று பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!