ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. புதிய விதிமுறையின்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, உண்மையான பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும், அங்கீகரிக்கப்படாத நபர்களின் முறைகேடான முன்பதிவுகளை தடுப்பதற்கும் உதவும். அதே சமயம், ரயில்வே முகவர்களுக்கான 10 நிமிட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெனரல் டிக்கெட் முன்பதிவுக்கும் இந்த விதிமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தினமும் நள்ளிரவு 12:20 மணிக்கு தொடங்கி இரவு 11:45 மணி வரை நடைபெறும்.ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பயணம் செய்யும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.