பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து புதிய கட்சி தொடங்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளதை அடுத்து அக்கட்சி இரண்டாக உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா என்பவர் திடீரென கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரின் நம்பிக்கைக்கு உரிய அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென கட்சி மீது அதிருப்தி அடைந்து முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சனம் செய்ய தொடங்கினார்.
கடந்த சில மாதங்களாக இந்த விமர்சனப் போக்கு நீடித்து வந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால் ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.