பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் இதற்கு சம்மதிக்க வைக்க முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தேஜஸ்வி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என பாஜக கூட்டணி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்த லாலு பிரசாத் இளைய மகன் தேஜஸ்வி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது தலைமையில் எதிர்க்கட்சிகளை இணைத்து ஒரு அணி அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் நிதிஷ்குமாரை பிரதமராக்க தேஜஸ்வி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியும் பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருமுறை சிதறிவிடும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.