கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜேபி நட்டா குடும்ப கட்சிகள் குறித்த பட்டியலில் அதிமுகவையும் இணைத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் இன்று நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் ஜேபி நட்டா பேசினார். அப்போது அவர் இன்றைய அரசியல் கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன என்று தெரிவித்தார்.
காங்கிரஸ், சமாஜ்வாதி ஜனதா கட்சி, ராஷ்டிர ஜனதா கட்சி, சிவசேனா, மம்தா பானர்ஜி கட்சி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அதிமுக ஆகிய அனைத்தும் குடும்ப கட்சிகள் என தெரிவித்தார்.
குடும்ப கட்சி பட்டியலில் திமுகவுக்கு பதில் அவர் அதிமுகவை தவறாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.