Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்: சரத் பொன்சேகா காட்டம்..!

Advertiesment
sarath fonsekha
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (11:54 IST)
பிரபாகரனை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் வருவார் என்றும் பழ நெடுமாறன் நேற்று தெரிவித்து இருந்த நிலையில் இது குறித்து தமிழக அரசியல்வாதிகளே மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா இது குறித்து கூறிய போது ’இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரன் பெயரை உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்றும் பழ நெடுமாறன் அவர்களில் ஒருவர்தான் என்றும் இன்று வரைக்கும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார். 
 
பிரபாகரன் மட்டுமின்றி அவருடைய மனைவி மகளும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் மூவரும் நலமாறாக இருக்கிறார்கள் என்றும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர்கள் கொண்டாட்டம்; சிங்கிள்ஸ் திண்டாட்டம்! – வைரலாகும் காதலர் தின காமெடி மீம்ஸ்!