உத்தரப் பிரதேசத்தின் பந்தா மாவட்டத்தில், திருமணமாகி எட்டு மாதங்களே ஆன ஒரு கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலியான பெண்ணின் குடும்பத்தினர், அவரது மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை காரணமாகவே கொலை செய்துவிட்டு, அதை தற்கொலைபோல காட்ட முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் தந்தை, மகளின் கால்கள் தரையை தொட்ட நிலையில் சடலம் தொங்கியதாக புகார் தெரிவித்துள்ளார். மணமகனின் குடும்பத்தின் வரதட்சணை கோரிக்கைகளுக்காக தான் கடன் வாங்கியதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதவி காவல் கண்காணிப்பாளர் மாவிஸ் டோக், தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்கு பிறகு சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.