சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பழைய யூசர்கள் தொடர்ந்து செயலி செயல்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
மத்திய அரசின் தடை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே. பழைய யூசர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கும் பக்கவாக செக் வைத்துள்ளது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.
அதாவது, இந்த 59 செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.