Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனா எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவிக்கிறது

Advertiesment
China teaches
, திங்கள், 29 ஜூன் 2020 (23:32 IST)
திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள தங்களின் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுப்பதற்காக அங்கு 20 பயிற்சியாளர்களை அனுப்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், இந்திய - சீன படையினர் இடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய கைகலப்புக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மோதல் நிகழ்ந்த பகுதியில் இருநாட்டு படையினரும் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட எவ்வித ஆயுதத்தையும் எடுத்து செல்வதில்லை.

இந்த மோதலில் சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நாட்டு அரசு இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால், இந்த மோதலில் தங்களது ராணுவத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்ததாகவும், 76 பேர் காயமடைந்ததாகவும் இந்தியத் தரப்பு கூறுகிறது.

சீன ராணுவ வீரர்களுக்கு தற்காப்புக் கலைகளை பயிற்றுவிக்க பயிற்சியாளர்களை அனுப்புவது தொடர்பாக சீன அரசு ஊடகங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி செய்தி வெளியிட்டதாக ஹாங்காங்கை சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, சீன அரசு ஊடகமான சி.சி.டி.வி. என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 பயிற்சியாளர்கள் திபெத்தின் தலைநகர் லாசாவில் தங்கிருந்து வீரர்களுக்கு பயிற்சியளிப்பாளர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவுடனான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு அவர்கள் பயிற்சியளிப்பார்களா என்பதை சீன ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய - சீன துருப்புகளுக்கிடையே நடைபெற்ற மோதலுக்கு காரணமாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த மோதல் நிகழ்ந்த பகுதிக்கு அருகிலுள்ள, கடுமையான காலநிலை நிலவும், உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள, சர்ச்சைக்குரிய அக்சாய் சின்னை இந்திய தரப்பு உரிமை கோரி வந்தாலும் அது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இவ்விரு நாடுகளுக்கிடையே இந்த மோதலின்போதுதான் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உயிரிழப்பு நேர்ந்தது.

சரிவர எல்லைப்பகுதிகள் நிர்ணயிக்கப்படாத மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் (LAC) இவ்விருநாடுகளுக்கிடையே பல வாரங்களாக நீடித்து வந்த பிரச்சனையே இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மோதலாக மாறியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் ! டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்… எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு