சீன செயலிகளுக்கு தடை; உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தல்! – என்ன சொல்ல போகிறார் பிரதமர்?

செவ்வாய், 30 ஜூன் 2020 (08:41 IST)
இந்தியாவில் உள்ள சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மெல்ல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனா – இந்தியா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவின் மொபைல் அப்ளிகேசன்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சீன பொருட்களுக்கான தடையும் தொடர்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை மக்களுடன் உரையாடும் அவர் சீன பொருள் பயன்பாடுகளை கைவிடுதல், சீனாவுடனான உறவுநிலை மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை! – இன்றைய நிலவரம்!