Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு: இணையத்தில் வெளியானது பாடத்திட்டம்..!

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு: இணையத்தில் வெளியானது பாடத்திட்டம்..!

Mahendran

, வியாழன், 19 டிசம்பர் 2024 (10:24 IST)
2025-26-ம்  ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.அதே போன்று, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.
 
அதில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப் பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம் பெறும்.
 
அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணைய தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.
 
இவ்வாறு  தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
     
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் யார் கூட வேணாலும் போகலாம்.. அதை போட்டோ எடுத்தது யாரு? கண்டுபிடிச்சு உள்ள தள்ளுவேன்! - அண்ணாமலை அதிரடி!