தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்ப தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வுகளை எழுதி சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாடத்திட்டம் மாற்றப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம் குறித்த தகவல்கள் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதனை தேர்வு எழுதுபவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.