Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் யார் கூட வேணாலும் போகலாம்.. அதை போட்டோ எடுத்தது யாரு? கண்டுபிடிச்சு உள்ள தள்ளுவேன்! - அண்ணாமலை அதிரடி!

Advertiesment
BJP Annamalai Vijay

Prasanth Karthick

, வியாழன், 19 டிசம்பர் 2024 (10:06 IST)

நடிகர் விஜய் கோவா திருமணத்திற்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று லீக் ஆன நிலையில் அதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளார்.

 

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி அரசியலில் இறங்கியது முதலாக தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பங்கேற்க அவர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவா சென்றார். இதற்காக விமான நிலையத்தில் அவர் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போட்டோ லீக் ஆனது. மேலும் அவருடன் ஒரு பிரபல நடிகையும் விமானத்தில் சென்றதாக பலர் பேசி வந்தனர்.

 

இதுகுறித்து காட்டமாக பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “நடிகர் விஜய் அவரது சொந்த வேலையாக ஒரு திருமணத்திற்காக தனி விமானத்தில் கோவா செல்கிறார். அவர் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். அது அவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் விமான நிலையத்தில் அவர் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் இடத்தில் அவரை போட்டோ எடுத்தது யார்?
 

 

மாநில அரசின் பாதுகாப்பு பிரிவு இப்படி போட்டோ எடுத்து திமுக ஐடி விங்கிற்கு கொடுப்பதற்காகதான் வேலை பார்க்கிறதா? இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். அந்த புகைப்படத்தை எடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.

 

மேலும் சமீபத்தைய அம்பேத்கர் பிரச்சினை குறித்து பேசிய அவர் “அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி இந்தியாவில் ஆட்சி நடத்தும் ஒரே கட்சி பாஜகதான். அம்பேத்கரே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசியிருக்கிறார். அவர் முன்மொழிந்த ஒரு விஷயத்தைதான் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் எங்களுக்கு கடவுள் போல” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகள் படகுடன் மோதிய கடற்படை அதிவேக படகு! 13 பேர் மூழ்கி பலி! - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!