Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திட்டமிட்ட தேதிகளில் தேர்வு நடைபெறும்! – தேசிய தேர்வு முகமை!

Advertiesment
திட்டமிட்ட தேதிகளில் தேர்வு நடைபெறும்! – தேசிய தேர்வு முகமை!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:23 IST)
கொரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென பலர் கூறி வரும் நிலையில் திட்டமிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் ஐஐடி போன்றவற்றிற்கான ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன.

இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சகஜநிலை ஏற்படாத நிலையில் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும், நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி நுழைவு தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைனர் பெண்ணைக் கடத்திச் சென்ற இளைஞர் – மூன்று நாட்கள் கழித்து பிடித்த போலிஸ்!