Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரனாப் முகர்ஜி – மருத்துவமனை அறிவிப்பு!

ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரனாப் முகர்ஜி – மருத்துவமனை அறிவிப்பு!
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:13 IST)
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கிட்டதட்ட 14 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களை காண அரசியல் களம் காத்திருக்கிறது: விஜயகாந்துக்கு கமல் வாழ்த்து