நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனது வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசன், மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்த பின்னர் தற்போது நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார்
பாஜகவின் மூத்த தலைவரும் நாகலாந்து கவர்னருமான இல கணேசன் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன