Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிடச் சான்று! போலி ஆதாருடன் விண்ணப்பம் பதிவு!

Advertiesment
Donald Trump

Prasanth K

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (09:47 IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு பீகாரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக இந்தியாவில் சில பகுதிகளில் போலி ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் என பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக பாட்னாவில் நாய் ஒன்றின் புகைப்படத்துடன் ‘டாக் பாபு’ என்ற பெயரில் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதுபோல அவ்வபோது பல சான்றிதழ்களில் பல பிரபலங்களின் போட்டோவை வைத்து விண்ணப்பிப்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த ட்ரெண்டிங்கில் தற்போது இணைந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். 

 

பீகாரில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் ஒன்று வந்துள்ளது. அதில் டொனால்டு ட்ரம்பின் போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதனுடன் இணைக்கப்பட்ட ஆதார சான்றுகளை பரிசோதித்தபோது, அதில் டொனால்டு ட்ரம்ப்க்கு போலியான ஆதார் கார்டையும் தயாரித்து இணைத்துள்ளனர்.

 

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு இந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் யார் என தேடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபமாக பீகாரி தேர்தல் ஆணையம் வாக்காளர் மறு சரிபார்ப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் பலர் நீக்கப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப்பை சேர்க்க சொல்லி வந்துள்ள விண்ணப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?