Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 வயது கல்லூரி மாணவியின் பாதி எரிந்த நிலையிலான பிணம்.. பாலியல் பலாத்கார கொலையா?

Advertiesment
கர்நாடகா

Siva

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (09:18 IST)
கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் காணாமல் போன 20 வயது மாணவி ஒருவர், இரண்டு நாட்களுக்கு பிறகு பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்த வர்ஷிதா என்ற 20 வயது மாணவி, ஆகஸ்ட் 14 அன்று தனது விடுதியிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தபோது, தங்கள் மகள் இறந்துவிட்ட தகவலை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தனர்.
 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வர்ஷிதா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதற்கு பிறகு ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 
 
இந்தச் சம்பவம் தொடர்பாக கிராமப்புற காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதாகவும் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக மாநாடா.. மதுரை திருவிழாவா? கூட்டம் கூட்டமாக வந்து மாநாடு திடலை பார்வையிடும் மக்கள்!