Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வதந்தி எதிரொலி: ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்ட 1500 தபால் வங்கி கணக்குகள்

Advertiesment
வதந்தி எதிரொலி: ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்ட 1500 தபால் வங்கி கணக்குகள்
, வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (22:19 IST)
பெரும்பாலும் வதந்திகளால் தீமைகள்தான் ஏற்பட்டு வரும் நிலையில் மூணாறு பகுதியில் ஒரு வதந்தியால் பல மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது 
 
மூணாறில் கடந்த சனிக்கிழமை அன்று தபால் வங்கியில் கணக்கு தொடங்கினால் பிரதமர் அந்த கணக்கில் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வார் என்ற ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தி சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் உள்பட பலவிதங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து மறுநாள் காலை 8 மணிக்கு தபால் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்குகளைத் தொடங்க குவிந்தனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த தபால் நிலைய ஊழியர்கள் இது முற்றிலும் வதந்தி என்றும், இப்படி ஒரு சலுகை அறிவிப்பு அரசிடமிருந்து வெளிவரவில்லை என்று கூறியும் மக்கள் அதனை ஏற்கவில்லை. இதனை அடுத்து நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகவே தபால் நிலைய அதிகாரிகள் காவல் துறையினரை உதவிக்கு அழைத்தனர். காவல்துறையினரும் இது முற்றிலும் வதந்தி என்று கூறிய போதிலும் அதற்கு முன்னரே ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுவிட்டது. இறுதியில் அன்றைய ஒரே நாளில் 1,500 புதிய தபால் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் மறுநாள் தபால் வங்கிக் கணக்கு தொடங்கும் நபர்களுக்கு இலவச வீடு தரப்படும் என்ற வதந்தி பரவியது. இதனை அடுத்து மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தபால் வங்கி கணக்குகளை தொடங்கினர். ஆனால் இந்த வதந்தியால் ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கிய ஆயிரக்கணக்கானோர் இனி தங்களால் முடிந்த அளவு அந்த கணக்கில் சேமிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதன் - விலங்கு கலப்பின கரு உற்பத்திக்கு ஜப்பான் அரசு அனுமதி! அதிர்ச்சியில் பொதுமக்கள்