Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூரில் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர்! ஏ.சி.சண்முகம் குறித்து பரவும் வதந்தி!

வேலூரில் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர்! ஏ.சி.சண்முகம் குறித்து பரவும் வதந்தி!
, புதன், 17 ஜூலை 2019 (21:33 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் பாஜக விற்கு எதிரான ஒரு அலை இருந்ததால் திமுக அபாரமாக வெற்றி பெற்று புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு திமுக ஆதரவு அலை இல்லை என்றும் மோடியின் எதிர்ப்பு அலையே காரணம் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறினர் 
 
இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலின் முடிவு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலம், ஆள்பலம், படைபலம் ஆகியவை இருக்கும் என்பது தெரிந்ததே. மேலும் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிடவில்லை என்பதால் அதிமுக வாக்குகள் சிதற வாய்ப்பில்லை என்பது ஒரு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது 
 
மேலும் திமுக எம்பிக்கள் 38 பேர் பாராளுமன்றத்துக்கு இருந்தாலும் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால் அவர்களால் எந்த பலனும் இல்லை என்றும் வேலூர் ஒரு தொகுதியிலாவது ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் அந்தத் தொகுதி ஒரு அமைச்சரின் தொகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் அதிமுகவினர் ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர்
 
webdunia
வேலூர் மக்களும் நமது தொகுதி அமைச்சரின் தொகுதியாக வர வாய்ப்புள்ளது என்பதால் ஏசி சண்முகத்திற்கு வாக்களிக்க தயாராகி வருவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை எப்படியும் வெற்றி பெற செய்தே தீரவேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் . 
 
இருப்பினும் மற்ற 38 தொகுதிகளிலும் எளிதாக வென்றது வேலூர் தொகுதி திமுகவுக்கு எளிதாக இருக்காது என்றும், போட்டி கடுமையாக இருக்கும் என்றும், யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள்