Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து! தமிழர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி!

Advertiesment
Kolkata Fire accident

Prasanth Karthick

, புதன், 30 ஏப்ரல் 2025 (09:23 IST)

கொல்கத்தாவின் மத்தியப் பகுதியான பால்பட்டி மச்சுவாவில் தங்கும் ஓட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக ஓட்டலை விட்டு வெளியேறினர். 4வது மாடியில் தங்கியிருந்த பலரும் பக்கவாட்டு ஏணிகளின் மூலம் இறங்கும்போது சிலர் விழுந்து காயமடைந்துள்ளனர்.

 

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டபோது தீயில் கருகி பலியான 14 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும், அவரது பேரன், பேத்தியும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி குறித்து கேலி சித்திரம்.. காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்..!