நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்விகிதத்தை அதிகப்படுத்தினர்.
பின்வரிசையில் ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் அதிரடியில் இறங்க 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் 205 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய டெல்லி அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் தேவைப்படும் ரன் விகிதம் அதிகமாகிக் கொண்டே சென்றது.
அதன் காரணமாக அழுத்தம் உருவாகி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழக்க ஆரம்பித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் மட்டுமே சேர்த்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட, கொல்கத்தா அணி ஏழாவது இடத்தில் உள்ளது.