முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, "நாய் கடித்தால், கடித்த இடத்தில் சோப்பு போட்டு கழுவினாலே போதும்; அதுவே ரேபிஸ் வைரஸை கொன்றுவிடும்" என்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நேர்காணலில் பேசிய அம்பிகா சுக்லா, "நாய் கடித்ததும் கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவினாலே ரேபிஸ் வைரஸ் இறந்துவிடும். அதனால்தான் கோடிக்கணக்கானோர் வாழும் இந்த நாட்டில், ரேபிஸ் மரணங்களின் எண்ணிக்கை வெறும் 54 ஆக உள்ளது. நியாயமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாய் எந்த அளவுக்கு கடிக்குமோ அந்த அளவுக்கு கடிப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், நாய்கள் பொதுவாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றும், நாய்க்கடி குறித்து தேவையில்லாமல் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள், தெரு நாய்கள் தொடர்பான விவாதத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.