அறுவை சிகிச்சைக்காக விடுமுறை எடுத்திருந்த ஒரு பெண், அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஓய்வில் இருந்த நிலையில், படுக்கையில் இருந்தபடியே வேலை செய்ய வேண்டும் என்று அவர் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளர் மனிதநேயமற்ற வகையில் உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது வேதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்காக 15 நாட்கள் விடுமுறை பெற்ற நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும்போது, "படுக்கையில் இருந்தபடியே வேலை செய்யுமாறு என்னுடைய மேலாளர் அறிவுறுத்தினார்" என்று அந்த இளம் பெண் தனது சமூக வலைதளத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
"பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுவரை பெரிய அளவில் நீண்ட விடுப்புகள் நான் எடுக்கவில்லை. இந்த அறுவை சிகிச்சைக்காக நான் திட்டமிட்டு விடுமுறை எடுத்தும், நான் அறுவை சிகிச்சைக்காக மயக்க நிலையில் இருக்கும்போது கூட இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புவது மனிதநேயமற்றது" என்றும் அவர் புலம்பியுள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள், நிறுவனத்தின் மேலாளருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "மனிதத்தன்மையற்ற வகையில் மேலாளர் நடந்து கொள்கிறார் என்றும், இப்படிப்பட்ட நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிய வேண்டுமா?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.