Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதித்தாலும் ஆடம்பர கடைகளில் செலவு செய்ய தயக்கம்: இளைஞரின் பதிவு குறித்த விவாதம்

Advertiesment
விமான நிலையம்

Siva

, ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:17 IST)
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர், பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆடம்பர கடைகளில் ஷாப்பிங் செய்ய தனக்கு போதுமான வசதி இருப்பதாக தோன்றவில்லை என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
விமான நிலைய  கடைகளின் புகைப்படங்களை பகிர்ந்த அவர், இவ்வளவு சம்பாதித்தாலும் அங்கு பொருட்கள் வாங்க தன்னம்பிக்கை வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தள பயனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
ரூ.50 லட்சம் வருமானம் என்பது, பெரிய முதலீடுகளுக்கு பிறகு உடனடியாக செலவழிக்கக்கூடிய தாராள பணம் இல்லை.
 
இந்தக் கடைகள், தலைமுறை தலைமுறையாக செல்வம் கொண்டவர்கள் அல்லது வெளிநாட்டு பயணிகளை மட்டுமே இலக்காக கொண்டவை.
 
வருமானத்தையும் செலவையும் குழப்ப வேண்டாம்; இந்த கடைகள் பெரிய பணக்காரரகளுக்கு மட்டுமே ஆனது என்ற கருத்தும் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழையால் இடிந்து தரைமட்டமான பாலம்.. 6 பேர் பரிதாப பலி..!