Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 வயது இளைஞருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த கும்பல்.. தகாத உறவால் விபரீதம்..!

Mahendran
புதன், 9 ஜூலை 2025 (11:04 IST)
பீகார் மாநிலத்தில், 24 வயது இளைஞர் ஒருவருக்கு அவருடைய அத்தையுடன் தகாத உறவு இருந்ததாக சந்தேகப்பட்ட ஒரு கும்பல், இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மிதிலேஷ் குமார் என்ற 24 வயது இளைஞர், அவருடைய அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து, அத்தையின் உறவினர்களை சேர்ந்த ஒரு கும்பல் மிதிலேஷ் குமாரை கம்பு மற்றும் தடியால் அடித்து உதைத்ததோடு, அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது. அதன் பிறகு, அத்தை வரவழைக்கப்பட்டு, அவரும் தாக்கப்பட்ட நிலையில், அந்த கும்பல் இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்தது.
 
இது குறித்து மிதிலேஷின் தந்தை கூறுகையில், தனது மகனை தாக்கிய கும்பலை தானும் தனது மனைவியும் தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தங்களையும் தாக்கியதாகவும் தெரிவித்தார். தங்கள் மகனுக்கு முதுகு, கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தனது மகனை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது மிதிலேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால், அருகில் உள்ள உயர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அத்தையுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்பட்ட ஒரு சம்பவத்தால் நடந்த இந்த விபரீதம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா? திமுக நகராட்சி தலைவி வீடு இடிப்பு..!

இன்று ஒருநாள் மட்டும் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள்..! என்ன காரணம்?

நமீபியாவில் உற்சாக வரவேற்பு.. டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி..!

ஒரே நாளில் டெல்லி சென்ற சித்தராமையா, டிகே சிவகுமார்.. ராகுல் காந்தியை சந்திக்க திட்டம்.. முதல்வர் மாற்றப்படுகிறாரா?

பிசியான பாலத்தில் திடீர் விரிசல்.. வாகனங்கள் ஆற்றில் விழுந்து விபத்து.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments