பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.34.50 குறைத்துள்ளன. திருத்தப்பட்ட இந்த விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை குறைப்பு, வர்த்தகப் பயன்பாட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் மாதாந்திர விலை மறுசீரமைப்புக்கு பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை நிலவரப்படி, டெல்லியில் 19 கிலோ வர்த்தக எல்.பி.ஜி. சிலிண்டரின் சில்லறை விலை தற்போது ரூ.1,631.50 ஆக இருக்கும். சென்னையில் ரூ.1789க்கு விற்பனை செய்யப்படும்.
இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய விலையான ரூ.868.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.