Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

Advertiesment
gas cylinder

Siva

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (08:43 IST)
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றம் குறித்து அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 25 ரூபாய் குறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கும், வணிக பயன்பாட்டிற்கும் என தனித்தனியாக சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில், இன்று சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.1881 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு ரூ.1906க்கு விற்பனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், சென்னையில் ரூ.868.50 என்ற விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தாய்மார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
கடந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்த நிலையில், இந்த மாதமும் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!