Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (16:15 IST)
கொல்கத்தாவின் காஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், 55 வயது பாதுகாப்பு காவலாளி இன்று கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த சம்பவத்தில் 3 பேர் கைதான நிலையில் தற்போது நான்காவதாக ஒருவர் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 24 வயதான சட்டக்கல்லூரி மாணவி, கல்லூரி பாதுகாப்பு காவலாளி அறையில் மூன்று பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்த இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின்படி, ஜூன் 15 அன்று இரவு 7:30 மணியளவில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் பிரிவு கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் மாணவர், வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா , சைஃப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகிய 2 சட்டக்கல்லூரி மாணவர்கள் என 3 பேரும் தன்னைச் சூழ்ந்துகொண்டு, காவலாளியை மிரட்டி வெளியேற்றிவிட்டு, அறையை பூட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
"நான் எதிர்த்துப் போராடினேன், அழுதேன், கெஞ்சினேன். ஹாக்கி ஸ்டிக்கால் தாக்கப்பட்டு, குடும்பத்தினரையும் காதலனையும் கொன்றுவிடுவதாக மிரட்டப்பட்டேன்," என்று மாணவி தனது புகாரில் கூறியுள்ளார். 
 
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக துன்புறுத்திய பின்னர், அதிகாரிகளிடம் சொல்ல கூடாது என்று மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். "நான் ஒரு சட்ட மாணவி. இப்போது நானே பாதிக்கப்பட்டவள். எனக்கு விரைவில் நீதி வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த சம்பவம் காவலாளியின் அறையில் நடந்ததால் தற்போது 54 வயது காவலாளி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 117.06 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர்.. அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை..!

நாளை முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்பின் உத்தரவு அமல்..

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என்பதில் என்ன தவறு? தமிழிசை கேள்வி..!

நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்