பாம்புகள் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசென்ஸ் வழங்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் கடந்த 30 ஆண்டுகளாக பாம்புகளைப் பிடித்து வருகிறார். குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார். அதில் கொடிய விஷத்தன்மை உள்ள பாம்புகளும் உண்டு.
கடந்த ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் குடியிருப்பில் புகுந்த நல்ல பாம்பை மீட்கச் சென்ற போது அவரை பாம்பு கடித்தது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், வாவா சுரேஷுக்கு கேரள மாநில வனத்துறை பாம்புகளை பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்க முடிவு செய்துள்ளது. வாவா சுரேஷ் அறிவியல் பூர்வமாக பாம்புகளைப் பிடிப்பதில்லை என வனத்துறை அதிகாரிகள் கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு அனுபவத்தின் அடிப்படையில் பாம்புகளை பிடிக்க லைசென்ஸ் வழங்கப்படவுள்ளது.