Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் ரத்து..? – போக்குவரத்து ஆணையம் அதிரடி!

TTF Vasan
, செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (08:30 IST)
அபாயகரமான விதத்தில் வாகனம் ஓட்டுவதால் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.



யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் பிரதான சாலையில் பைக்கில் வீலிங் செய்ய முயன்ற டிடிஎஃப் வாசன் விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிடிஎஃப் வாசன் மீது இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் டிடிஎஃப் வாசனின் இந்த சாகச செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த பலர் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டி லைசென்ஸை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல்1: இஸ்ரோ முக்கிய தகவல்..!