Publish Date: Sun, 15 Oct 2023 (15:36 IST)
Updated Date: Sun, 15 Oct 2023 (15:39 IST)
கோவில் திருவிழாவின் போது பாம்புகளை வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி என்ற பகுதியில் உள்ள கோவில் திருவிழா சமீபத்தில் நடந்தது. இந்த திருவிழாவுக்காக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பாம்புகளை வைத்து நடனமாடினார்.
அவர் தனது இரண்டு கையில் இரண்டு படம் எடுக்கும் பாம்பை வைத்துக்கொண்டு நடனமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து அவரை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் பாம்புகளை வைத்து ஆபத்தான முறையில் நடனமாடிய அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.