Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

Advertiesment
கர்நாடகா

Siva

, திங்கள், 28 ஜூலை 2025 (16:45 IST)
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டதால், குடும்ப கௌரவத்தை காப்பதற்காகத் அவரது தங்கை மற்றும் மைத்துனரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
HIV தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரின் நிலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது தங்கை நிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து இந்த இளைஞரை கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் அஞ்சியுள்ளனர்.
 
இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இறந்த இளைஞரின் தங்கை நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் தற்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். 
 
HIV தொற்று குடும்பத்திற்கு அவமானம் என்று நம்பியே, நிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக நிஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இந்தச் சம்பவம், சமூகத்தில் HIV தொற்று குறித்த விழிப்புணர்வின்மை மற்றும் தவறான புரிதல்கள் எந்த அளவுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!