ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி உட்பட மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத்தகவலை அடுத்து, ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டுப் படை 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையை தொடங்கியது. ஜபர்வன் மற்றும் மகாதேவ் மலைகளுக்கு இடையே நடைபெற்ற இந்த என்கவுண்டரில், பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர், கடந்த காலத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற பயங்கரவாதிகளையும் விரைவில் என்கவுண்டர் செய்வோம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்திருப்பது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.