Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 கோடி ரூபாய் நாய் உடான்ஸா? ரெய்டு வந்ததால் வெளிப்பட்ட உண்மை!

Advertiesment
Bengaluru Costly dog

Prasanth Karthick

, வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (09:38 IST)

சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியதாக வெளியான செய்தியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

பெங்களூரை சேர்ந்த சதீஷ் என்பவர் சமீபத்தில் உலகத்தின் விலை உயர்ந்த நாய் வகையை வாங்கியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. Wolf dog என்ற வகை நாயை அவர் வெளிநாட்டில் இருந்து ரூ.50 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் ரூ.50 கோடி ரூபாய் அவருக்கு எப்படி கிடைத்தது? அந்த நாயை எவ்வாறு வாங்கினார்? அதற்கு வரி ஏதாவது செலுத்தப்பட்டு ரசீது பெறப்பட்டுள்ளதா? என பல கேள்விகள் எழுந்த நிலையில், சமீபத்தில் அமலாக்கத்துறையினர் அவரது வீட்டையும், நாய் பண்ணையையும் சோதனை செய்தனர்.

 

அப்போது சதீஷ் தான் வாங்கிய நாய் 50 கோடி ரூபாய் மதிப்புடையது அல்ல என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நாய் தனது பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் இந்திய வகை நாய்தான் என்பதும், அதன் விலை ரூ.1 லட்சம் என்பதும் அம்பலமாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!