Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

Advertiesment
இன்போசிஸ்

Mahendran

, புதன், 2 ஜூலை 2025 (17:57 IST)
பெங்களூருவில் உள்ள  இன்போசிஸ் அலுவலகத்தில், கழிவறையில் ஒரு பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்போசிஸில் பணிபுரியும் ஒரு பெண் அளித்த புகாரில், தான் பயன்படுத்திய கழிப்பறை அறைக்கு அருகிலுள்ள அறையில் சந்தேகத்திற்கிடமான ஒரு அசைவை கண்டதாகவும், அப்போது ஒரு நபர் தன்னை படமெடுத்து கொண்டிருந்ததை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். 
 
உடனடியாக  மற்ற ஊழியர்கள் உதவியுடன் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து அவரது மொபைல் போனை சோதனை செய்தபோது ரகசிய வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன்பின் அந்த நபரை காவல்துறையில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
 
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, ‘அந்த நபர் அந்த பெண் ஊழியர் மட்டுமின்றி ரகசியமாக மேலும் பல பெண்களைப் படமெடுத்தாரா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!