Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் முதல் விமானப் படை பெண் கமாண்டர் உயிரிழப்பு!

இந்தியாவின் முதல் விமானப் படை பெண் கமாண்டர் உயிரிழப்பு!
, வியாழன், 22 அக்டோபர் 2020 (10:50 IST)
இந்திய விமானப்படையின் முதல் விங் கமாண்டராக பணியாற்றிய விஜயலட்சுமி ரமணன் உயிரிழந்துள்ளார்.

1924-ம் ஆண்டும் பெங்களூருவில் பிறந்து எம்.பி.பி.எஸ். முடித்த விஜயலட்சுமி ரமணன் ராணுவத்தின் மருத்துவர்கள் பிரிவில் 1955-ம் ஆண்டு மருத்துவராக சேர்ந்தார். காயமடையும் ராணுவ வீரர்களுக்கான சிகிச்சைகளை அளித்த அவர் மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றியவர்.

1972-ல் முதல் பெண்  விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்ற அவர் 1979-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் தனது 96 ஆவது வயதில் முதுமைக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகவேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இந்தியாவின் இன்றைய நிலவரம்!