மேற்குத் தொடர்ச்சி மலை நடுவே, புதிதாக ஒரு வண்ணத்துப்பூச்சி சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி, கேரள மாநில வனவிலங்கு வாரியம், கண்ணூரில் உள்ள ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தை ஆரளம் வண்ணத்துப்பூச்சி சரணாலயம் என்று பெயர் மாற்றம் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட முதல் சரணாலயம் இதுதான்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	55 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த சரணாலயத்தில் 266-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் உள்ளன. இது கேரளாவில் காணப்படும் மொத்த வண்ணத்துப்பூச்சி வகைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும். இவற்றில் சில ஆரளத்திற்கு மட்டுமே உரித்தானவை, மற்றவை அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய வகையாகும். 
 
									
										
			        							
								
																	
	 
	அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளிலிருந்து வண்ணத்துப்பூச்சிகள் இங்கு இடம்பெயரும்போது, இந்த சரணாலயம் ஒரு உயிருள்ள வானவில்லாக மாறி, கண்கவர் காட்சியளிக்கிறது. 
 
									
											
									
			        							
								
																	
	 
	இங்குள்ள வண்ணத்துப்பூச்சி சஃபாரி பாதை வழியாக வழிகாட்டப்பட்ட பயணங்கள் மூலம், பார்வையாளர்கள் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறை, அவை வளரும் தாவரங்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	மேலும் இது சுற்றுலா பயணிகளுக்கு இயற்கையின் மடியில் ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. இந்த புதிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம், இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு புதிய பயண அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.