Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் போட்டி பஹல்காம் தியாகத்தின் அவமானம்! - இறந்தவரின் மனைவி வேதனை!

Advertiesment
Bahalgham attack priyadarshini

Prasanth K

, திங்கள், 15 செப்டம்பர் 2025 (10:29 IST)

நேற்று ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நடந்த அவமானம் என உயிரிழந்தவரின் மனைவி பேசியுள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் பலியாகினர். இதை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்நிலையில் தற்போது துபாயில் நடந்து வரும் ஆசியக்கோப்பை போட்டிகளில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.

 

இதில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், இந்த வெற்றியை பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்து பஹல்காமில் கணவனை இழந்த பிரியதர்ஷினி “பாகிஸ்தான் அணியுடன் நடந்த இந்த கிரிக்கெட் போட்டி, அந்த நாட்டிற்கு நிதியுதவி செய்வது போன்றது. இது எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களின் குடும்பத்திற்கும் ஒரு அவமானம்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரிய வேண்டியவங்களுக்கு புரியும்! இபிஎஸ்க்கு செங்கோட்டையன் சூசக செய்தி!