17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் இடமளிக்கப்படவில்லை. அதுபோல டி 20 போட்டிகளில் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக டி 20 அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில்லை அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் “அக்ஸர் படேல் துணைக் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கு விளக்கம் அளிக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.