2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் 2021-22 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். வழக்கமாக பட்ஜெட் அறிவிப்புகள் காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் நிலையில் தற்போது கொரோனா காரணங்களால் காகிதத்தை தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் இந்திய பட்ஜெட் வரலாற்றிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. இதனால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.