Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்! இணையத்தை முடக்கும் மத்திய அரசு! – அதிரடி நடவடிக்கையா?

Advertiesment
National
, சனி, 30 ஜனவரி 2021 (15:44 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அப்பகுதிகளில் இணைய சேவையை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் எட்டப்படவில்லை.

இந்நிலையில் சமீப காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக டெல்லியில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காஸிப்புர் மற்றும் திக்ரி பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தி சிலை உடைப்பு…மனம் உடைகிறேன் – வைரமுத்து டுவீட்