டெல்லியில் வங்கதேசத்தனர் ஆக்கிரமிப்பு செய்த ஒரு பகுதியில் உள்ள வீடுகள் மொத்தமாக இடித்து தரமட்டம் ஆக்கப்பட்டதாகவும் அதற்கு பாதுகாப்பிற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள தைமூர் நகர் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி சொந்த வீடு கட்டி இந்தியர்கள் போலவே வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆம் ஆத்மி அரசில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது பாஜக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் இன்று ஒரே நாளில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் பாராமிலிட்டரி படையினர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கு போலியான ஆவணங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.