Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 29 April 2025
webdunia

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

Advertiesment
தியாகம்

Siva

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:20 IST)
தனது மனைவி இன்னொரு வாலிபரை காதலிக்கிறார் என்பது தெரிந்து, அவரது எண்ணம் போலவே அவரது காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவருக்கு, அவரது கிராமத்தில் உள்ளவர்கள் "தியாகி" பட்டம் சூட்டி உள்ளனர்.  இது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃப்ரகாகாபாத் என்ற பகுதியில், ஒரு ஆண்டுக்கு முன்பு ராகுல் சிங் என்ற இளைஞருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமண நாளிலிருந்து, அவரது மனைவி அவருடன் வாழவில்லை என்றும், ஏதாவது ஒரு காரணம் கூறி தனது கணவரை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதை அடுத்து, திருமணமான ஒரு ஆண்டு கழித்து தான் தனது மனைவியின் மனதில் காதலர் குடியிருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க அவர் முடிவு செய்தார்.
 
இதற்காக வழக்கறிஞரை வைத்து முறைப்படி விவாகரத்து கோரிவிட்டு, அதன் பிறகு மனைவியின் காதலரை வரவழைத்து தனது மனைவிக்கும் அவரது காதலற்கும் சட்டப்படி திருமணம் செய்து வைத்தார்.
 
தனது மனைவி விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக, விவாகரத்து கொடுத்தது மட்டுமின்றி, அந்த திருமணத்தையே அவரே முன்னே நின்று நடத்தி வைத்ததை எடுத்துக்கொண்டு, அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அவரை "தியாகி" என்று அழைத்து வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!