Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

Advertiesment
ஆட்டோகிராஃப்

Siva

, ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (16:58 IST)
2004ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம், 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் ஒளிரவிருக்கும் நிலையில், புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
 
சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம், வெளியான உடனேயே பெரும் வரவேற்பை பெற்றது.  
 
மேலும், இந்த படத்தின் பாடல்கள் அனைவரையும் மயக்கின. குறிப்பாக, பா.விஜய் எழுதிய "ஒவ்வொரு பூக்களுமே..." என்ற பாடல் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ‘ஆட்டோகிராஃப்’ மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் தகவலை இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மே 16ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. இதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 
அவர் கூறியதாவது: காலத்தால் சில பதிவுகள் நம் மனதை விட்டு அகலாது. எளிய மனிதர்களுக்குள் நிகழும் கால மாற்றங்களை அழகியலோடு பதிவு செய்த படம் #ஆட்டோகிராஃப். இயக்குநர் அண்ணன் சேரன் அலையலையாய் ஹீரோக்களின் தேவைக்காய் அலைந்து பின் தன்னையே அதற்காக செதுக்கிக் கொண்ட செம்ம ஹிட் படம். மீண்டும் ஒரு  முறை நம்மை நம் இளமை பருவத்திற்கு கடத்திப் போக மாற்றங்ளை தனக்குத் தானே மெருகேற்றிக் கொண்டு வருகிறது.
 
தயாராகலாம் நாம் இன்னொரு முறை  காதல் படிமத்திற்குள் இளகிக்கொள்ள! 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!