Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 17 April 2025
webdunia

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

Advertiesment
Madurai

Prasanth Karthick

, செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (10:19 IST)

வயதில் மூத்த பெண்ணை முறை தவறி காதலித்ததை உறவினர்கள் எதிர்த்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சீகுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்த பெண் சில ஆண்டுகள் முன்பே தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

 

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் மயிலம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனாலும் மணிகண்டனும், மயிலம்மாலும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்

 

ஒரு கட்டத்தில் இவர்களது கள்ள உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். ஆனால் அதை சட்டை செய்யாத அவர்கள் வீடு எடுத்து தனியாக வாழத் தொடங்கியுள்ளனர். அதை தொடர்ந்து மயிலம்மாளின் கணவரும், உறவினர்களும் வந்து அவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

தங்கள் இருவரையும் சேர்ந்து வாழ இரு குடும்பமுமே அனுமதிக்காததால் விரக்தியடைந்த அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முறை தவறி ஏற்பட்ட காதல் தற்கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!