Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

Mahendran
வியாழன், 4 ஜூலை 2024 (16:39 IST)
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஆக பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் இன்று மாலை முதலமைச்சராக  ஹேமந்த் சோரன் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்  என்றும் ஆளுனர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
முன்னதாக நேற்று ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். அவரது அழைப்பை ஏற்று பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாலையே முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால்  முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பய் சோரன் என்பவர் முதல்வராக பதவியேற்றார் என்பதும்  ஹேமந்த் சோரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

பாகிஸ்தானின் பொய் முகம்.. தோலுரிக்க உலகம் சுற்றும் இந்திய எம்பிக்கள்..!

82% பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது தந்தையும் சகோதரனும் தான்: பாகிஸ்தான் முன்னாள் எம்பி அதிர்ச்சி தகவல்..!

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments