ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணை குழுவில் ஓய்வுபெற்ற மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹத்ராஸ் சம்பவத்தில் இதுவரை 116 பேர் உயிரிழந்த நிலையில் போலோ பாபாவின் காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனால்தான் உயிரிழப்பு அதிகமாகியுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் ஏற்கனவே ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.