ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் சம்பய் சோரன் திடீரென தனது பதவியில் இருந்து விலகி உள்ளதை அடுத்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பய் சோரன் என்பவர் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த வாரம் ஹேமந்த் சோரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதை அடுத்து அவர் மீண்டும் முதல்வர் ஆவதற்கு ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய முதல்வர் சம்பய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதை அடுத்து மூன்றாவது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பய் சோரன் ராஜினாமா செய்ததற்கு பாஜாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.